வழக்கம் போல தங்கள் மடைமாற்றும் அரசியலை துவக்கியுள்ள திமுகவினர் - வானதி சீனிவாசன் கடும் கண்டனம் - - Seithipunal
Seithipunal


வழக்கம் போல தங்கள் மடைமாற்றும் அரசியலை துவக்கியுள்ள திமுகவினருக்கு கண்டனம் தெரிவிப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறியுப்பில், "கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தொழில் அமைப்பு நிர்வாகிகளுடனான கலந்துரையாடலில், தான் நட்புரீதியாக கூறிய கருத்துக்களை I.N.D.I கூட்டணிக் கட்சிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக பொய்யாக திரித்துக் கூறி விளம்பரப்படுத்துவதை நினைத்து வருந்திய, அன்னபூர்ணா உணவகத்தின் நிறுவனர் ஸ்ரீனிவாசன் அவர்களே, தாமாக முன்வந்து தான் அப்படிப் பேசியிருக்க கூடாது என்று கூறியதை, வழக்கம்போல் திரித்துப் பேசி அரசியல் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். 

மேலும், நமது மத்திய நிதியமைச்சர் அவர்களும், “GST பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன். ஆனால், பொது வாழ்க்கையில் உள்ள ஒரு பெண்மணியின் உணவுப் பழக்கத்தை இப்படி பொதுவெளியில் பேசு பொருளாக்கலாமா?” என்று தனது வருத்தத்தைத் தான் அவரிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதில் யாரும் தனது அதிகாரத்தையோ அரசியல் பொறுப்பையோ முன்னிறுத்தி எதுவும் பேசவில்லை.

ஆனால், பரம்பரை பரம்பரையாக பொய் பிரச்சாரத்தின் மூலம் வெறுப்பரசியல் செய்யும் I.N.D.I கூட்டணிக் கட்சிகள், இந்த விவகாரத்தை தங்கள் இஷ்டம் போல திரித்து பொய் அவதூறுகளைப் பரப்ப முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்த விவகாரத்தில் நம் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதனால் இந்த விவகாரத்தை மேற்கொண்டு தொடராமலும், யார் மனதையும் புண்படுத்தாமலும் இருக்க பாஜக தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன்" என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MLA Vanathi Srinivasan Condemn to DMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->