"பாஜக மேல நம்பிக்க இல்ல." கோவை பாஜக மகளிரணி நிர்வாகியின் பரபரப்பு பதிவு.!
Bjp Mythili Vino Facebook post about Kovai Bjp
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து திமுகவில் இணைவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறி கோவை மாவட்ட பாஜக மகளிரணியைச் சேர்ந்த மைதிலி வினோ என்பவரை பாஜக கோவை மாவட்ட தலைவர் கட்சியிலிருந்து நீக்கினார்.
இது குறித்து அவர் கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கோவை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த திருமதி மைதிலி வினோ என்பவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் இன்று முதல் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார்.
ஆகவே, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி குறித்த எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தபடுகிறது." என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இதுகுறித்து பா.ஜ.கவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மகளிரணி செயலாளர் மைதிலி வினோ, "பா.ஜ.க மாவட்ட தலைமையின் மீது நம்பிக்கை இல்லாததால் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் முடிவிற்கு வந்தேன்." என்று முகநூலில் விளக்கம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
English Summary
Bjp Mythili Vino Facebook post about Kovai Bjp