6-வது இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழநாடு! திமுக ஆட்சியின் அவலத்தை அம்பலப்படுத்திய புள்ளி விவரம்! - Seithipunal
Seithipunal


திராவிட மாடல் அரசு அதை செய்து விட்டது, இதை செய்து விட்டது என்று புளகாங்கிதம் அடைந்து, மார்தட்டிக் கொள்ளும் திமுக ஆட்சியின் அவலத்தை சமீபத்திய தொழில் துறை சார்ந்த புள்ளி விவரங்கள் அமபலப்படுத்தி உள்ளதாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "2024-2025 நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் பல்வேறு மாநிலங்கள் ஈர்த்த முதலீடுகள் பட்டியலில் தமிழ்நாடு மிகவும் பின்தங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், வியப்பையளிக்கவில்லை. 

1. மகாராஷ்டிரா.   -   ரூபாய் 4,15,911 கோடிகள்.
2. குஜராத்             -  ரூபாய்  1,80,028 கோடிகள்.
3.கர்நாடகா           -  ரூபாய்  1,32,709 கோடிகள்.
4. உத்தரபிரதேசம் -   ரூபாய்    93,584 கோடிகள்.
5. ராஜஸ்தான்        -  ரூபாய்    76,040 கோடிகள். 
6. தமிழ்நாடு          -  ரூபாய்    71,961 கோடிகள். 
7. ஒடிசா                -  ரூபாய்    68,107 கோடிகள். 
(குறிப்பு : கடந்த சில வருடங்களுக்கு முன் இரண்டாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது 6வது இடத்தில் உள்ளது.)

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மகாராஷ்டிர மாநிலம் 1,35,055 கோடி முதலீட்டில் (20.90%),  614 புதிய திட்டங்களை துவக்கியுள்ள நிலையில், தமிழ்நாடு ரூபாய்.25,299 கோடி முதலீட்டில் (3.91%) 111 திட்டங்களை துவக்கி 10வது இடத்திற்கு தள்ளப்பட்டது. வியப்பளிக்கும் வகையில் உத்தரபிரதேசம் முதல் காலாண்டில் 146 புதிய திட்டங்களில் 53,401.32 கோடி முதலீடுகளை ஈர்த்து 2வது இடத்திற்கு முன்னேறியது. ஹரியானா, ஒடிசா, குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, சட்டிஸ்கர், தெலுங்கானா மாநிலங்கள் முறையே, 3,4,5,6,7,8,9 ம் இடங்களை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் மகாராஷ்டிர மாநிலம் 2,80,856 கோடி ரூபாய் முதலீட்டில் (30.49%) 661 புதிய திட்டங்களை துவக்கியுள்ள நிலையில், தமிழ்நாடு 46,662.04 கோடி ரூபாய் முதலீட்டில் 172 திட்டங்களை துவக்கி நான்காவது இடத்தில் உள்ளது. இந்த காலாண்டில் குஜராத், கர்நாடக மாநிலங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில உள்ளன.

முதல் காலாண்டில் தமிழ்நாடு 3.91 விழுக்காடிலிருந்து, 5.07 விழுக்காடாக உயர்ந்த நிலையில், குஜராத் மாநிலம் 8.26 விழுக்காட்டிலிருந்து 15.07 விழுக்காடை பகிர்ந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல் கர்நாடக மாநிலம் 5.41% லிருந்து 10.61% ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவின் உற்பத்தி மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் இருப்பதாக பெருமை பேசும் திராவிட மாடல் தமிழக அரசு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெரும் முன்னேற்றத்தை சந்தித்து வருகிற வேளையில், மற்ற மாநிலங்களிடையே கடும் போட்டியை சந்திக்க வேண்டும் என்ற உண்மை நிலையை உணர்ந்து நம் கட்டமைப்பை மேலும் வலுவாக்கும் வகையில் செயல்பட வேண்டும். இல்லையேல், மற்ற மாநிலங்கள் நம்மை பின்னுக்கு தள்ளி முன்னேறி சென்று விடும். அப்படி நேர்ந்தால் தமிழகம் தொழில் முன்னேற்றம், வேலை வாய்ப்பு, தனிமனித வருவாய் போன்றவற்றில் பின்தங்கி பொருளாதார ரீதியாக கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். 

தமிழகத்தின் இப்போதைய தேவை, முறையான ஊழலற்ற நிர்வாகம், திட்டமிட்ட கட்டமைப்புக்கான தொலை நோக்கு பார்வை, வெளிப்படையான தொழில் துறை திட்டமிடல் ஆகியவையே. மொழி ரீதியான, ஜாதி ரீதியான, மத ரீதியான பிளவு அரசியலை கைவிட்டு ஆக்கபூர்வமாக மத்திய அரசோடு இணைந்து பணியாற்றுவது மட்டுமே தமிழ்கத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்ந்து செயல்பட வேண்டும்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan Condemn to DMK Govt MK Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->