கற்பனை குதிரையை தட்டி விட்டுக்கொண்டே கனவுலகத்தில் சஞ்சரிக்காதீர் - CM ஸ்டாலினுக்கு பாஜக பதிலடி!
BJP Narayanan Thirupathy condemn to DMK CM Stalin
தமிழக காவல் துறைக்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
அதில், "கடந்த சில நாட்களாக ஹிந்தியை எதிர்த்து ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்பவர்களை கைது செய்கிறீர்களா? கைது செய்யப்பட்டவர்களை எங்கே காவலில் வைக்கிறீர்கள்?
எவ்வளவு நேரம் வைத்திருந்தீர்களா போன்ற விவரங்களை ஆதாரத்துடன் வெளியிடுவீர்களா? ஏனெனில், கடந்த நான்கு வருடங்களாக பல மக்கள் பிரச்சினைகளுக்காக ஜனநாயக ரீதியாக போராட்டங்களை மேற்கொண்ட பாரதிய ஜனதா கட்சியினரை கைது செய்து காலையிலிருந்து மாலை வரை காவலில் வைத்தது போல் நியாயமாக நடந்து கொண்டதா காவல் துறை என்று அறிவதற்கு தான் இந்த கேள்வி" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் மக்களவை தொகுதிகளை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், இதுகுறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்று, அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கும், நாராயணன் திருப்பதி பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், "நடக்காத ஒன்றை நடக்கப் போவதாகவும், வராத ஒன்றை வந்து விட்டதாகவும், நினைக்காத ஒன்றை நினைத்து விட்டதாகவும் கற்பனை குதிரையை தட்டி விட்டுக்கொண்டே கனவுலகத்தில் சஞ்சரிக்காதீர்.
தமிழகத்தில் தினமும் நடந்து கொண்டிருக்கும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை தடுத்து நிறுத்தி, பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நிகழா வண்ணம் நடவடிக்கை எடுப்பதோடு, அமைதி பூங்காவான தமிழகத்தை வன்முறைக்காடாக்கும் மெத்தனப்போக்கை மாற்றிக்கொண்டு, நிர்வாகமின்மையை சீர்திருத்த ஆக்க பூர்வமான சிந்தனையோடு கனவுலகத்திலிருந்து நனவுலகத்திற்கு வாருங்கள். தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் பணியாற்றுங்கள்." என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan Thirupathy condemn to DMK CM Stalin