அதிர்ச்சி வீடியோ!!! AI ரோபோ மக்களைத் தாக்க முயன்றதால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


சீனாவில் நிகழ்ச்சி ஒன்றில் செயற்கை நுண்ணறிவால் Artificial Intelligence(AI) உருவாக்கப்பட்ட ரோபோ திடீரெனத் தாக்குதல் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஏராளமான மக்கள் கூடியிருந்த நிலையில் திடீரென இது போன்ற சம்பவம் நடந்தது அதிர்ச்சியை அளித்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையதளத்தில் தற்போது பரவலாகப் பகிரப்பட்ட நிலையில் , பிரம்மாண்ட நிகழ்ச்சியில் மனித உருவம் கொண்ட ரோபோ அங்கு கூடியிருந்தவர்களில் சிலரை நோக்கி முன்னேறி சென்று தாக்க முயற்சிக்கிறது. உடனே அங்கிருந்த காவலர்கள் சட்டென்று அந்த ரோபோவை இழுத்து மக்களிடமிருந்து தள்ளி நிறுத்தி வைத்தார்.

Artificial Intelligence(AI):

மேலும் நுண்பொருள் கோளாறால் ரோபோ அவர்களை நோக்கி முன்னேறி சென்றதையடுத்துச் சில வினாடிகளிலே இயல்பு நிலைக்கு மாறியது. இதில் நல்ல விஷயம் என்னவென்றால் இந்த நிகழ்வால் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் சிந்திக்கும் திறனுடைய A I தொழில்நுட்பம் மனிதர்களுக்கு வருங்காலங்களில் அச்சுறுத்தலாக அமையும் என்ற பரவலான நம்பிக்கையை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. இது குறித்த கருத்துகளை நெடிசன்கள் இணையதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking video AI robot tries to attack people


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->