ஒரு நாளைக்கு 1 மணிநேரம் செல்போன் பயன்படுத்தினாலே ஆபத்துதான்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
The effects of continuous cell phone use
ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஸ்மார்ட் போனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், சில ஆண்டுகளில் கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படும் என ஆய்வின் தெரியவந்துள்ளது.
அறிவியல் தொழில் நுட்பமானது, நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டு செல்கிறது. இதனால் எண்ணேற்ற அறிவியல் பொருட்கள், மனிதர்களின் கைகளுக்கு விருந்தாக அமைகின்றது.
அதில் ஒன்றாக செல்போன் வளர்ச்சியும் இருக்கிறது. இன்றைய காலகட்டங்களில் செல்போன்கள் பேசுவதற்கு மட்டுமின்றி, விளையாட்டு, ஆடல், பாடல், வீடியோக்கள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்காவும் செல்போன் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நொடி பொழுதில், மனிதனின் உள்ளங்கையில் செல்போனை வைத்தபடி உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் பெறுகின்றோம். கணினியின் பாதி சேவையாற்றும் செல்போன்கள், மனிதனின் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
அதே நேரத்தில் இந்த செல்போன்கள் ஆபத்தை ஏற்படுத்தும் என வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். செல்போன்களை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதன் மூலமும், தவறாக பயன்படுத்துவதன் மூலமும், பல்வேறு தீமைகள் விளைகின்றது.
செல்போனை தினசரி எவ்வளவு நேரத்திற்கு மேல் பயன்படுத்தினால், என்ன ஆபத்து ஏற்படும் என ஜாமா நெட்வொர்க் நிறுவனம், ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி,
* ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், டேப் என டிஜிட்டல் சாதனங்களை அதிகமாக பயன்படுத்துவதால், "ஒரு நாளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஸ்மார்ட் ஃபோன்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சில ஆண்டுகளில் கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படும்" என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
* அதிக நேரம் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்தினால், அது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது என இந்த ஆய்வு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
English Summary
The effects of continuous cell phone use