அதிகாலையில் நிலநடுக்கம்... மேற்கு வங்காள மக்கள் பீதி!
Earthquake in the early morning People of West Bengal panic
மேற்கு வங்கத்தில் அதிகாலை ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
வங்காள விரிகுடாவில், இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் தலைநகர் கொல்கத்தா மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் பல பகுதிகள் உணரப்பட்டது.
சரியாக இன்று காலை 6.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்க காரணமாக மக்கள் பீதி அடைந்துள்ளனர். எனினும், இதன் காரணமாக சேதம் அல்லது உயிரிழப்புகள் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கம் பற்றி பல சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
அதில் ஒருவர் "அதிகாலையில் கொல்கத்தாவில் நிலநடுக்கம் ஏற்படும்பொழுது நான் விழித்திருந்தேன், இதனால் நிலநடுக்கம் என்னால் உணரமுடிந்ததாக" என பதிவிட்டுள்ளார்.
English Summary
Earthquake in the early morning People of West Bengal panic