இதை விட கேவலம் திமுகவிற்கு ஏதும் உள்ளதா? வெட்கம், மானம், சூடு, சொரணை.. அடமானம் வைத்த கட்சியை மீட்க பார்க்கிறார்களா? பாஜக தரப்பில் கேள்வி!
BJP Narayanan Thirupathy DMK Communists Samsung issue
பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஓட்டா, நோட்டா? எது வேண்டும் என்று தி மு க முடிவு செய்ய வேண்டும் என கேட்கிறார் முன்னாள் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ-வும், சி ஐ டி யு வின் தலைவருமான சௌந்தரராஜன்.
அதாவது சாம்ஸங் நிறுவனத்திடம் பணம் பெறுகிறது திமுக என்று நேரடியாக குற்றம் சாட்டுகிறார்.
இதை விட கேவலம் திமுக விற்கு ஏதும் உள்ளதா?
மானம், வெட்கம், சூடு, சொரணையில்லாமல் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு பத்து கோடி ரூபாய் திமுகவிடம் பெற்றுக்கொண்ட கம்யூனிஸ்டுகள், இன்று அதுகுறித்த வெட்கமேயில்லாமல் திமுக பணம் பெறுவதாக குற்றம் சாட்டுவது ஒரு புறம் இருக்க,
இது குறித்து திமுகவினர் அமைதியாக இருப்பது வேடிக்கை.
திமுக விடம் அடமானம் வைத்த கட்சியை மீட்க பார்க்கிறார்களா கம்யூனிஸ்டுகள்?
அல்லது கம்யூனிஸ்டுகளை வைத்து ஏதாவது நாடகம் நடத்துகிறதா திமுக?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
BJP Narayanan Thirupathy DMK Communists Samsung issue