உங்களை யார் தடுத்தா? காந்தி வழியில் பூரண மதுவிலக்கு கொண்டு வாங்க! CM ஸ்டாலினுக்கு பாஜக பதிலடி!
BJP Narayanan Thirupathy Say About DMK CM Mk Stalin
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "தென்னிந்தியர்கள் இந்தியைக் கற்க தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா நிறுவப்பட்டதுபோல, வடஇந்தியாவில் தென்னிந்திய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ள உத்தர பாரத தமிழ் பிரச்சார சபாவையோ, திராவிட பாஷா சபாவையோ நிறுவ முடிந்ததா? கோட்ஸே வழியைப் பின்பற்றும் இயக்கத்தினர் காந்தியின் நோக்கத்தை ஒரு போதும் நிறைவேற்ற மாட்டார்கள்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதற்க்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கொடுத்துள்ள பதிலில், "வட இந்தியாவில் தமிழ் பிரச்சார சபையை நிறுவுவதை யார் தடுத்தார்கள்?
வட இந்தியர்கள், ஹிந்தியை தென் இந்தியர்கள் கற்கவேண்டும் என நினைத்தது போல், தமிழர்களாகிய நாம், தமிழை வட இந்தியர்கள் கற்க வேண்டும் என ஏன் நினைக்கவில்லை? புதிய கல்விக் கொள்கை இதை நிறைவேற்றும் என்ற நிலையில், அதை ஏற்க மறுப்பது ஏன்?
ஹிந்தியை இந்த நாட்டில் உள்ள அனைவரும் தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார் காந்தி. நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? ஆங்கிலம் நம்ம அடிமைபடுத்தும் மொழி, ஆகவே அதை அறவே அகற்ற வேண்டும் என்றார் காந்தி, நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பீர்களா?
பூரண மதுவிலக்கு இந்தியாவில் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று கூறினார் காந்தி. நிறைவேற்றுவீர்களா? உடனே காந்தியடிகளின் நோக்கத்தை நிறைவேற்றுவீர்களா? அல்லது கோட்ஸேவின் வழியை பின்பற்றும் இயக்கம் திமுக தான் என்பதை ஏற்றுக்கொள்வீர்களா? என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
BJP Narayanan Thirupathy Say About DMK CM Mk Stalin