'ப்ளீச்சிங் பவுடர் ஊழல்' தான் தற்போதைய திராவிட மாடலா? நேரலையில் வசமாக சிக்கிய திமுக அமைச்சர் - பாஜக நாராயணன் கண்டனம்! - Seithipunal
Seithipunal


இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா மோ அன்பரசன் மற்றும் செய்தியாளருக்கு இடையேயான கேள்வி, பதில் விவரம் பின்வருமாறு:

அமைச்சர் அன்பரசன்: "நீ தானே அன்னிக்கு  ப்ளீச்சிங் பவுடர் போட்டதாக சொன்னது.

நிருபர் : ஆமா சார்.

அமைச்சர் அன்பரசன். ப்ளீச்சிங் பவுடர் விலை என்ன என்று தெரியுமா? ப்ளீச்சிங் பவுடர் 10 -13 ரூபாய். மைதா மாவு விலை என்ன தெரியுமா? 40 ரூபாய்.

 

நிருபர் : ப்ளீச்சிங் பவுடர் எவ்வளவு டெண்டர் விட்டிருக்காங்க மாநகராட்சியில்?

அமைச்சர் அன்பரசன் : எந்தந்த ஊருக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு.

 

நிருபர் : அப்புறம் ஏன் சார் 15 ரூபாய் ப்ளீச்சிங் பவுடரை 55 ரூபாய்க்கு டெண்டர் விட்டாங்க மாநகராட்சியில்? 

அமைச்சர் அன்பரசன் : எங்க? அப்டிலாம் ஒன்னும் இல்லையே, 

 

நிருபர் : 55 ரூபாய்க்கு தான் சார் விட்டிருக்காங்க.

அமைச்சர் அன்பரசன் : அதற்கு கமிஷ்னர் பதில் சொல்வார்.

இதனை சுட்டிக்காட்டி பாஜகவின் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஒரு அமைச்சர் ப்ளீச்சிங் பவுடரில் நடைபெற்ற ஊழல் குறித்து ஆணையர் / கமிஷ்னர் பதில் சொல்வார் என்றால் என்ன அர்த்தம்? அவர் தான் ஊழல் செய்தார் என்று பொருளா?  இந்த அரசில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று ஒப்புக்கொள்கிறாரா? 

அப்படியானால் அவர் மீது எடுக்கப்படப் போகும் நடவடிக்கை எடுக்கப்பட்டது ? இல்லையெனில் ஏன் எடுக்கப்படவில்லை? ஒரு நிருபரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் போவது ஏன்? 

'ப்ளீச்சிங் பவுடர் ஊழல்' தான் தற்போதைய திராவிட மாடலா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதில் சொல்வாரா? ஆணையரை நீக்குவார்? தா.மோ.அன்பரசனை நீக்குவாரா? பொறுத்திருந்து பாப்போம்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan Thirupathy Say about DMK Minister Scam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->