"இன்னைக்கு பேசுவாங்க; நாளைக்கு கழட்டி விடுவாங்க"..!! திமுகவுக்கும் இதே நிலைதான்.. பி.டி.ஆரை கோர்த்து விடும் பாஜக..!!
BJP Narayanan tweets about PTR Palanivel Thiagarajan
தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மருமகன் சபரீசன் குறித்து பேசியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.
அமைச்சர் உதயநிதி மற்றும் சபரீசன் சுமார் 30,000 கோடி ரூபாய்க்கு சொத்துக் குவித்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழிப்பதாக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் டெல்லியைச் சேர்ந்த ஒரு ஊடகவியலாளரிடம் பேசியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இதற்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் "செப்டெம்பர் 11 அன்று இரட்டை கோபுரம் விழுந்த போது கீழ்த்தளத்தில் இருந்தவன் நான், 2009, செப்டெம்பர் 15, 2008 அன்று 150 வருடம் வளமாக இருந்த Lehman Brothers வங்கி திவாலான போது 400 பேருக்கு தலைவரா இருந்தவன் நான். எதுவும் நிரந்தரம் இல்லை. அது எனக்கு பலத்தை குடுக்கிறது.
என் அடையாளம், என் முன்னோர்கள் கற்றுக் கொடுத்தது என் சைவ வழிபாடு. இறை நம்பிக்கை. இன்னிக்கு பேசுவாங்க, நாளைக்கு கழட்டி விடுவாங்க. வந்தா வருது; போனா போகுது" - பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வருடம் கூறியது. "இன்றைய ஆளும் கட்சி, இரட்டை ஆதிக்கத்தினால் வீழ்ச்சியைசந்தித்தாலும், 30,000 கோடி முறைகேடுகளிகனால் Lehman Brothers போல் வீழ்ந்தாலும்" அன்று அவர் பேசியவை தற்போதைய விவகாரத்திற்கும் பொருந்தும் வகையில் உள்ளது. உண்மையில். பிடிஆர் உணர்ந்தே பேசியுள்ளார்." என பதிவிட்டுள்ளார். நாராயண திருப்பதியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
BJP Narayanan tweets about PTR Palanivel Thiagarajan