கேசவ விநாயகத்தை நீக்கலனா அவ்வளவுதான்..!! பாஜக உடனான உறவை முடித்துக் கொள்கிறேன்..!! பாஜகவில் இருந்து விலகினார் திருச்சி சூர்யா..!! - Seithipunal
Seithipunal


கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரணும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவாவும் செல்போனில் மோதிக்கொண்ட ஆடியோ வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. அந்த ஆடியோவில் பேசிய சூர்யா சிவா டெய்ஸி சரணை தகாத வார்த்தைகளால் பேசி இருந்தார்.

இந்த விவகாரம் குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இருவரும் ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து நாங்கள் இருவரும் அக்கா தம்பியாகவே பாஜகவில் பயணம் செய்ய விரும்புகிறோம் என பேட்டி அளித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழகத்தில் திமுகவுக்கு நாங்கள் தான் எதிர்க்கட்சி என்று சொல்லும் தமிழக பாஜக ஸ்டாலின் உறும்பும்போது மட்டும் பயந்து பதுங்கும் பூனைகளால் நிறைந்துள்ளது. தமிழக பாஜகவை சினிமா கலாச்சாரம் அழித்துவிட்டது" என விமர்சனம் செய்திருந்தார்.

இதனை திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி அண்ணாமலையை குறிப்பிட்டு "உங்கள் கனவு ஆசை எல்லாம் சினிமாவை சுத்தி இருக்குதாமே!! நான் சொல்லல சுப்பிரமணி சாமி சொல்லுது !! நடிகை வாசுகி கிட்ட ஆயிரம் ரூபாய் கொடுத்து திமுகவை திட்ட சொன்னப்பவே தெரியும் எல்லா பில்டபு தானு.. பாஜகவே ஒரு நாடக கம்பெனிதானு" என விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு தமிழக பாஜக ஓபிசி அணி தலைவர் திருச்சி சிவா "அப்படியே வச்சுக்கோ ஆனா உங்கள மாதிரி நடிகைகளையே வச்சிக்கிற கம்பெனி கிடையாதுபா. புரியவில்லை என்றால் போய் உங்க சின்னவர் கிட்ட கேளு" என பதிலடி தந்திருந்தார். திருச்சி சூர்யாவின் இத்தகைய விமர்சனம் கடும் சர்ச்சையை உண்டாக்கியது. திருச்சி சூர்யா மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்குவதால் அண்ணாமலை என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில் திருச்சி சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் "அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி. இதுவரை இந்த கட்சியில் பயணித்த து எனக்கு கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும். அதை அடைய வேண்டுமென்றால் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மாற்ற வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார். தமிழக பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா சிவா விலகியது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP OBC team leader Trichy Suriya siva quits Tamil Nadu BJP


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->