ஆளும் "காங்கிரஸ் அரசை கவிழ்க்க" பாஜக திட்டம்.!!
BJP plan no confidence on congress Himachal govt
இமாச்சலப் பிரதேச மாநில ஆளுநரை பாஜக எம்எல்ஏக்கள் திடீரென சந்தித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலப் பிரதேச ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லாவை பாஜக எம்எல்ஏக்கள் சந்தித்து காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலுக்கான போட்டியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர்.
இதன் காரணமாக இமாசலப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்கிடம் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
BJP plan no confidence on congress Himachal govt