ஈரோட்டில் நடைபெற்றது தேர்தலே இல்லை.. பாஜக பொன் ராதாகிருஷ்ணன்.! - Seithipunal
Seithipunal


ஈரோட்டில் நடைபெற்றது தேர்தலே இல்லை என பாஜக பொன் ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோயில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது பேசிய அவர் திரிபுரா மேகலையா நாகலாந்து ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜகவின் சமூக வெற்றி பிரதமரின் ஆளுமைக்கு மக்கள் கொடுத்த பரிசு என தெரிவித்துள்ளார்.

மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் ஆளுமையை மக்கள் ஏற்றுக்கொள்ள தக்க வகையில் இந்த தேர்தல் வெற்றி அமைந்துள்ளது. மேலும் ஈரோட்டில் நடந்த தேர்தல் அது தேர்தலை இல்லை சந்தையில் ஏலம் விடுவதைப் போல ஈரோட்டில் மக்களை கூறு போட்டு விற்றிருக்கிறார்கள்.

திருமங்கலம் பார்முலா என்றாலே திமுக தான். அந்த திருமங்கலம் ஃபார்முலாவே ஈரோட்டில் இப்போது விஞ்ஞானபூர்வமாக ஜனநாயகத்தை இப்படியும் கேவலப்படுத்த முடியும் என்பதை திமுகவினர் நிரூபித்துள்ளனர். பணம் பாதாளம் வரை பாயும் ஆனால் இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாதாளத்தையும் தாண்டியுள்ளதாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Pon Radhakrishnan speech about erode by election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->