இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஓபிஎஸ் ஆதரவு.. நன்றி தெரிவித்த பாஜக பொன் ராதாகிருஷ்ணன்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதால் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் காங்கிரஸ் கட்சி சார்பில் இ.வி.கே.எஸ் இளங்கோவன் களம் இறக்கப்படலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சியான தமாகா கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிட்டது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட விரும்புவதால் கூட்டணி மற்றும் மக்கள் நலன் கருதி விட்டுக் கொடுப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் வேட்பாளர் மற்றும் இடைத்தேர்தல் குறித்து நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் எதிர்வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக தனித்து போட்டியிட்டால் ஆதரவு தருவீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம் பாஜக போட்டியிட்டால் நாங்கள் ஆதரவு அளிப்போம். கடந்த தேர்தலில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதால் தேசிய கட்சியான பாஜக போட்டியிட விரும்பினால் முழுமையாக ஆதரவளிப்போம்" என பதில் அளித்துள்ளார்.

இந்த நிலையில் பாஜக போட்டியிட்டால் ஆதரிப்போம் எனக் கூறிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு பாஜக பொன் ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலை குறித்து ஆலோசித்து வருகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Pon Radhakrishnan thanks to OPS


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->