அருணாச்சல் சட்டப்பேரவை தேர்தல் : ஆட்சியை தக்கவைக்கும் பாஜக! - Seithipunal
Seithipunal


அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இன்று சட்டப்பேரவை தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளிவந்த முடிவின் படி அருணாச்சல பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனிடையே பாஜகவின் 10 வேட்பாளர்கள் போட்டியின்றி அருணாச்சல பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டுவும் ஒருவர். இவர் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் உள்ள முக்டோவில் இருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அம்மாநிலத்தில் உள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தொகுதிகளைத் தவிர மற்ற 50 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே 37 தொகுதிகளுக்கு மேல் பாஜக வென்று விட்டது.

இந்நிலையில், மேலும் சில இடங்களை பாஜக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்,  அறுதி பெரும்பான்மையுடன்  அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என்று ஏறக்குறைய உறுதியாகி விட்டது. 

மேலும் தற்போது முதல்வராக இருக்கும் பெமா காண்டு ஏற்கனவே 3 முறை போட்டியின்றி தேர்ந்துக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை 4 முறை அவர் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து துணை முதல்வர் சவுனா மெய்னும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Retain The Ruling Power in Arunachal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->