புதுவிதமான 'ரோபோடிக்' பிரச்சாரத்தை கையில் எடுத்த தமிழக பாஜக.!
bjp robotic campaign
திருப்பூரை அடுத்த பல்லடத்தில் பா.ஜ.க சார்பில் வருகின்ற 17-ம் தேதி தாமரை மாநாடு நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொள்கிறார்.
இந்த மாநாடு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து தொடங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாவட்ட துணைத் தலைவர் குணசேகரன் ஆகியோர் 'ரோபோடிக்' பிரசாரத்தை தொடங்கி வைத்துள்ளனர்.
மேலும், மாநில பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ராகேஷ் பாண்டி, ஊடக பிரிவு மாவட்ட தலைவர் நரேன் பாபு, ஓ.பி.சி அணி மாவட்ட தலைவர் கார்த்தி, ஓ.பி.சி அணி மாவட்ட செயலாளர் ஜெகதீஸ்வரி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாலிபர்கள் ஒளிரும் விளம்பர பதாகைகளை முதுகில் அணிந்து கொண்டு சுற்றுவட்டார பகுதிகளில் 'ரோபோடிக்' பிரசாரத்தை மேற்கொண்டனர்.