அண்ணா சாலையில் பிரதமர் மோடி படத்தை அரசு வைக்கவில்லை என்றால் நாங்களே வைப்போம் - பாஜக.! - Seithipunal
Seithipunal


போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய வலியுறுத்தி நேற்று பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், தமிழக உள்துறை செயலர் பணீந்திர ரெட்டியை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்துள்ளதாவது,

போலி பாஸ்போர்ட் விவகாரம் குறித்து ஆளுநரிடம் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் மனு அளித்துள்ளார். மதுரை அவனியாபுரம் செம்பூரணி தெருவில் மட்டும் 67 போலி பாஸ்போர்ட்கள் தரப்பட்டுள்ளன.

இந்த போலி பாஸ்போர்ட் விநியோகத்துக்கு தனி கும்பல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், உள்துறை செயலர் பணீந்திர ரெட்டியிடம் மனு அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கு பிரதமர் மோடியை அழைத்துள்ளனர். ஆனால் அண்ணா சாலையில் முதலமைச்சரின் படம் மட்டும் பெரிதாக இருக்கிறது. 

காழ்ப்புணர்ச்சியுடன் அரசியல் செய்வதை கண்டிக்கிறோம். பிரதமர் படத்தை வைக்கவில்லை என்றால், பாஜக சார்பில் நாங்கள் வைப்போம்". என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://t.me/seithipunal


English Summary

BJP say about anna salai pm modi pic


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->