பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் - பாஜகவில் இருந்தே எழுந்த குரல்! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை இழந்து தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

400 இடங்களை கைப்பற்றுவோம் என்ற முழக்கத்துடன் தேர்தல் பிரச்சாரத்தின் தொடங்கிய பாஜகவுக்கு பெரும்பான்மையே கிடைக்காமல் போனதற்கு முக்கிய காரணம் மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாஜகவின் சரிதான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதுதான் உண்மையும்கூட.

மேலும் பிரதமர் மோடியின் தலைமையிலான இந்த பாஜக அரசை மக்கள் புறக்கணித்து உள்ளதாகவும், தோல்விக்கு பொறுப்பேற்ற தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் காங்கிரஸ்-திமுக கூட்டணியை சேர்ந்த சில தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று, பாஜக தரப்பிலிருந்து குரல் எழுந்துள்ளது.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்த போது ராஜீவ் காந்தி ராஜினாமா செய்தார். பெரும்பான்மைக்காக சிறிய கட்சிகளிடம் அவர் மன்றாட வில்லை என்று தெரிவித்துள்ளார்.

சுப்ரமணியம் சுவாமியின் இந்த பதிவிற்கு பாஜகவை சேர்ந்த பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக ராகுல் காந்தியின் தலைமையில் தான் காங்கிரஸ் கட்சி தலைக்குப்புற கவுந்ததாகவும், ஒரு மரியாதை உள்ள எந்த ஒரு இந்து மதத்தை சேர்ந்தவரும் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற கருத்துக்களை சுப்ரமணிய சுவாமிக்கு பதிலடியாக பாஜகவினர் கொடுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Subramaniam Swami say PM Modi resign


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->