ஜெயலலிதா போன்று மம்தா பானர்ஜி; துணிச்சலான பெண்மணி; பிரதமராக வேண்டும்.! - பாஜக எம்.பி சுப்பிரமணியசாமி.!!
Bjp Subramaniasamy says Mamta Banerjee should become PM of India
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று (மே-09) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியசாமி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் "இன்று மத்தியில் ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு அஞ்சாத எதிர்க்கட்சி தேவைப்படுகிறது. பலர் தற்போதைய மத்திய அரசை எதிர்த்து ஒரு கட்டத்துக்கு மேல் போகாமல் உள்ளனர். அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமோ என்ற அச்சம் தான் காரணம். இது போன்ற நிலைப்பாடு இந்திய ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தியாவின் பிரதமராக வர வேண்டும். மம்தா தான் இந்தியாவில் துணிச்சலான பெண். அவரை யாராலும் மிரட்ட முடியாது. மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளை எதிர்த்து போராடிய விதத்தை பாருங்கள். நாட்டில் சக்திவாய்ந்த பெண் யார் என்ற கேள்விக்கு முன்பு ஜெயலலிதா இருந்தார்.
அதன் பிறகு மாயாவதியை அவ்வாறு நினைத்தேன். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சக்தி வாய்ந்த பெண் மம்தா பானர்ஜி உள்ளார். அவர் தான் துணிச்சலுடன் எதிர்த்து நிற்கக் கூடியவர்" என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை புகழ்ந்துள்ளார்.
English Summary
Bjp Subramaniasamy says Mamta Banerjee should become PM of India