எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்? விஜய் & CM ஸ்டாலினை கேள்வி கேட்கும் தமிழிசை!
BJP Tamilisai ask to Vijay and CM Stalin DMK TVK ADMK
இன்று பெரியாரின் நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்திய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக முன்னாள் முதல்வர் எம்,ஜி.ஆர்-க்கு ஏன் அஞ்சலி செலுத்தவில்லை என்று, முன்னாள் ஆளுநரும், பாஜகவை சேர்ந்தவருமான தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில்,
"எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்......???
பெரியாருக்கு அஞ்சலி செலுத்திய தவெக தலைவர் சகோதரர் திரு.விஜய் அவர்கள் மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினமான இன்று ஏன் அஞ்சலி செலுத்தவில்லை...?
டெல்லியில்... பிரதமர் அவர்கள் எந்தக் கட்சி சார்ந்தவராக இருந்தாலும் முன்னாள் பிரதமர்களின் நினைவு தினங்களில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்....
அந்த வகையில் முன்னாள் முதலமைச்சர் மட்டுமல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75-ஆண்டு கால அரசியலிலும் முக்கிய பங்காற்றிய திரு.எம்.ஜி.ஆர் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அஞ்சலி செலுத்தி இருக்க வேண்டுமில்லையா?
இது ஒரு சாமானியனின் கேள்வி? என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
BJP Tamilisai ask to Vijay and CM Stalin DMK TVK ADMK