தமிழ்நாட்டு மக்களின் நலனை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிக்கிறார் - தமிழிசை சௌந்தரராஜன்! - Seithipunal
Seithipunal


பாஜக மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் தனது  X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நிதிநிலை அறிக்கையை காரணம் காட்டி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் நலனை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் நலனையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிக்கிறார்.

-மத்திய அரசு அறிவித்த நிதிநிலை அறிக்கையில் அனைத்து திட்டங்களிலும் தமிழ்நாட்டின் நலனும்,தமிழ்நாட்டு மக்களின் நலனும் இருக்கிறது.

மேலும் தமிழ்நாட்டிற்கு தேவையானதை நேரில் சந்தித்து விவாதித்து பெற வேண்டுமே தவிர அரசியல் ஆதாயத்திற்காக கூட்டத்தை புறக்கணிப்பது தமிழ்நாட்டு மக்களின் நலனை புறக்கணிப்பதாகும்;

இப்படி ஒவ்வொரு வாய்ப்பிலும் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டு தமிழ்நாட்டின் நலனை முதலமைச்சர் புறக்கணிக்கிறார்; திமுகவின் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 


முன்னதாக இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில், , "தமிழ்நாடு என்ற சொல்லே, மத்திய அரசு பட்ஜெட்டில் இல்லை என்று சொல்வதை விட, மத்திய அரசின் சிந்தனை மற்றும் செயல்களில் தமிழ்நாடே இல்லை.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு புறக்கணிக்கிறது. மைனாரிட்டி பாஜகவை, மெஜாரிட்டி பாஜகவாக உருவாக்கிய சில மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு திட்டங்களை பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளத" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Tamilisai Soundararajan say about Budget and CM Stalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->