2 கட்சிகளும் சூப்பர்!ஊழல் பெருச்சாளிகள் சட்டத்தின் முன் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள்...!!! - நயினார் நாகேந்திரன்
Both parties great corrupt leaders punished by law Nainar Nagendran
தமிழ்நாட்டின் மாநில பா.ஜ.க. தலைவர் 'நயினார் நாகேந்திரன்' தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,"நேஷனல் ஹெரால்ட் என்ற பத்திரிக்கை நிறுவனத்தின் ரூ.5000 கோடி மதிப்பிலான சொத்துககளைத் தங்கள் ஆட்சியில் அபகரிக்க முயன்ற சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் நூதன ஊழலை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை.

அந்த நிறுவனத்திற்கு ரூ.90 கோடியைக் கடனாகக் கொடுப்பது போல் பாசாங்கு காட்டிவிட்டு பின்பு அதிகாரத்தை பயன்படுத்தி அதன் மொத்த பங்குகளையும், ராகுல் காந்தியை முக்கிய பங்குதாரராகக் கொண்ட "யங் இந்தியன்" என்ற நிறுவனத்திற்கு முறைகேடாக மாற்றியுள்ளது காங்கிரஸ்.
இத்தனைக்கும் முன்னாள் சட்ட அமைச்சர் மற்றும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி போன்றோர் பங்கு வகிக்கும் பழமையான அந்த நிறுவனத்தின் சொத்துக்களையே தங்கள் ஆட்சியில் சத்தமில்லாமல் சுருட்டிய காங்கிரஸ்.
எத்தனை அப்பாவி மக்களின் உழைப்பையும் சூறையாடியிருக்கும்?அதிகாரத்தை கருவியாகக் கொண்டு காங்கிரஸ் தான் இத்தனை ஊழல்களில் ஊறியது என்றால்.
அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வும் டாய்லெட் முதல் டாஸ்மாக் வரை ஊழல் செய்து காங்கிரசுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்களில்லை என்பதை நிரூபித்து வருகிறது.
இப்படி மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்கள் பிரதமர் மோடியின் ஊழலற்ற ஆட்சியில் எங்கும் ஓடி ஒளிய முடியாது. எனவே ஊழல் பெருச்சாளிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் என நம்புகிறோம்.
இப்படி ஊழல் செய்வதில் இரண்டு கட்சிகளும் சூப்பர். இந்த கட்சிகளின் ஜோடிப்பொருத்தம் மிகப் பிரமாதமாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.இது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.
English Summary
Both parties great corrupt leaders punished by law Nainar Nagendran