பிராமணர்களை இனப்படுகொலை செய்திருக்க வேண்டும் -  திமுகவுக்கு கடும் கண்டனம்.! முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் என்.நாராயணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"அண்மைக்காலமாக திமுகவினைச் சார்ந்த ஒருசில நிர்வாகிகள் பிராமண சமூகத்தினை தாக்கிப் பேசுவதும், சம்மந்தமில்லாமல் சாடுவதும் அதிகரித்து வருகிறது. 

திமுகவின் பேச்சாளர் ராஜிவ் காந்தி, சமீபத்தில் பிராமணர்களை இனப்படுகொலை செய்திருக்க வேண்டும் என்று அநாகரீகமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் பேசி உள்ளதை தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வாய்ப்பு கிடைக்கின்ற பொழுதெல்லாம் பிராமண சமூகத்தினை சாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

கட்சிகளுக்கோ, பிற கட்சி தலைவர்களுக்கோ அல்லது தனி நபர்களுக்கோ பதில் அளிக்கின்ற பொழுது பிராமண சமூகத்தின் பெயரினை இழுப்பது என்பது பகுத்தறிவு சார்ந்த செயல் இல்லை என்பதை அவர் உணர்ந்திட வேண்டும். இவர்களது பிராமண வெறுப்பு பேச்சுக்களை தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. 

இதுபோன்ற செயல்களில் திமுகவினர் ஈடுபடக்கூடாது என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கண்டிப்புடன் அறிவுரைகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது" இவ்வாறு அந்த அறிக்கையில் என்.நாராயணன் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bramins condemn to dmk


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->