BREAKING : மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு!
Breaking rajya sabha adjourned for the whole day
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மேலும், நவம்பர் 26-ம் தேதியான நாளை அரசியலமைப்பு தினத்தின் 75-வது ஆண்டு விழா நாடாளுமன்றத்தின் பழைய மைய மண்டபத்தில் கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில், இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, நாடாளுமன்றத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே அலுவலகத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து கூட்டம் தொடங்கிய நிலையில், உயிரிழந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதையடுத்து, அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முன்வைத்து எதிர்க்கட்சியினர் முழக்கம் எழுப்பியதால் மக்களவை 12 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சியினரின் தொடர் அமளி காரணமாக இன்று மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நாளை காலை 11 மணி வரை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
English Summary
Breaking rajya sabha adjourned for the whole day