தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் அறிவிப்பு.!
budget 2022 TNAssembly
வரும் 18 ஆம் தேதி சட்டமன்ற கூட்டம் துவக்கம் - நிதியமைச்சர் 18 ஆம் தேதி தமிழகத்தின் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்த அந்த அறிவிப்பில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை, 2022 -ஆம் ஆண்டு, மார்ச் திங்கள் 18 -ஆம் நாள், வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை -600 009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் கூட்டியுள்ளார்கள்.
மேலும், அன்று காலை 10.00 மணிக்கு 2022-2023 -ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பட்ஜெட் கூட்டத்தொடர் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.