மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர்.. குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடக்கம்.!
budget session 2022
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். முதல்கட்ட கூட்டத்தொடர் இன்று தொடங்கி பிப்ரவரி 161-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அடுத்த கட்ட கூட்டத்தொடர் மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. முதல் நாள் பாராளுமன்ற இரு சபைகளில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அப்போது அவர் கடந்த ஆண்டு மத்திய அரசு அமல்படுத்திய திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்.
இதையடுத்து, பாராளுமன்றத்தில் 2022-2033ஆம் ஆண்டு நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் மற்றும் வரி சலுகைகளை அதிக அளவில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வருமான வரி சலுகை, பொருளாதார வளர்ச்சிக்கான சலுகையும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என கூறப்படுகிறது.