உ. பி. யில் 8 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்?! முழு விவரம் இதோ.. - Seithipunal
Seithipunal



இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் காங்கிரசின் இந்தியா கூட்டணி 234 தொகுதிகளிலும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளிலும் வென்றுள்ளன. இதையடுத்து ஆட்சியமைக்கத் தேவையான 272 தொகுதிகளுக்கு மேல் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால் இக்கூட்டணியே மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் பாஜகவின் கோட்டையான உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜக 36 இடங்களையும், இந்தியா கூட்டணி 43 இடங்களையும் வென்றுள்ளன. மேலும் உத்திரபிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் 13 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4 சட்டமேலவை உறுப்பினர்கள் போட்டியிட்டுள்ளனர்.

அதில் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 1 சட்டமேலவை உறுப்பினர் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து இவர்கள் எம். பி. யாகி மக்களவைக்கு செல்ல இருப்பதால், உத்திரபிரதேசத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. 

இந்திய அரசியல் சாசனத்தின் படி ஒருவர் இரண்டு பதவிகளை வகிக்க முடியாது . எனவே அவர்கள் 8 பெரும் எம். எல். ஏ. பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து உத்திரபிரதேசத்தில் கர்ஹால், குந்தர்கி, கடேஹாரி, புல்பூர், காசியாபாத், கைர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

By Elections For 8 Constituency in U P


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->