இனி ரேஷன் கடைகளில் சிறு தானியம் - மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தகவல்..! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடியின் மூன்றாவது மத்திய அமைச்சரவையில் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக இருப்பவர் எல்.முருகன். இவர் தமிழக பாஜகவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இணை அமைச்சர் எல். முருகன் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள கீழ்நெல்லியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் பிரதமர் மோடியின் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இணை அமைச்சர் எல். முருகன், "பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற பின் விவசாயம், மகளிர் நலன், இளைஞர் உள்ளிட்ட 4 திட்டங்களுக்கு தான் முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறார்.

அதிலும் பிரதமர் மோடியின் முதல் நிகழ்ச்சியே விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கியது தான். விவசாயிகளின் கடன் சுமைகளை குறைக்கவே பிரதமர் மோடி 17 தவணை உதவித் தொகையை அந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு வழங்கினார்.

தற்போது சிறு தானியங்களை ஏற்றுமதி செய்யவும், அதேவேளையில் உள்நாட்டில் சிறு தானிய பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் ரேஷன் கடைகளில் சிறுதானியங்களை இலவசமாக வழங்குவது குறித்தும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம். விரைவில் இது தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என்று இணை அமைச்சர் எல். முருகன் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cabinet Deputy Minister L Murugan Says About Millets Will Sold in Ration shops


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->