கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாளும் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்..! - Seithipunal
Seithipunal


​மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளுக்கு நடிகர் விஜய்க்கு நேரில் சென்று விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி காலமானார். 
இந்நிலையில் நாளை கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் மற்றும்  சுதிஷ் உள்ளிட்டோரும் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். 

அவர்கள் விஜய்க்கு, விஜயகாந்தின் வெண்கல சிலை ஒன்றை வழங்கினர். நாளை தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் சினிமா வருகையில் விஜயகாந்தின் பங்கு முக்கியமானதாக அமைந்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

captains first year death anniversary


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->