பொய் வாக்குறுதி அளித்து பிரச்சாரம்! முதல்வரின் வெற்றியை எதிர்த்து வழக்கு.!! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதல்வர் சித்தராமையா வெற்றி பெற்றதை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சங்கரா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் "கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தலின் போது வருணா தொகுதியில் வெற்றி பெற்ற சித்தராமையா தனது தொகுதி மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பிரச்சாரம் செய்துள்ளார்.

இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறிய செயலாகும். மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும். மேலும் சித்தராமையாவை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.சுனில்தத் யாதவ் வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case filed to disqualify Siddaramaiah who won by making false promises


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->