சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான், சாதிகளுக்கு இடையில் உள்ள இடைவெளி குறையும் - இண்டி கூட்டணி தலைவர்!
caste Census Lok Sabha Akhilesh Yadav
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான், சாதிகளுக்கு இடையில் உள்ள இடைவெளி குறையும் என்று, மக்களவையில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் அரசியல் சாசனம் குறித்த விவாதம் நடைபெற்றபோது, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது, "வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வருமான விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்.
நமக்கு எப்போதாவது வாய்ப்பு கிடைக்கும், அந்த வாய்ப்பை தவறவிடாமல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் சாதிகளுக்கு இடையில் உள்ள இடைவெளி குறைக்க முடியும்.
தற்போது சமூகத்தில் மைனாரிட்டி மக்களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது. சீனாவின் ஆக்கிரமிப்பால் நமது எல்லைகள் சுருங்கி வருகிறது" என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
English Summary
caste Census Lok Sabha Akhilesh Yadav