சாதிவாரி கணக்கெடுப்பு: எந்த முயற்சியும் எடுக்காத தமிழக அரசு! பாராளுமன்றத்தில் அம்பலமான உண்மை!
Caste Census PMK Anbumani DMK Govt
சாதிவாரி கணக்கெடுப்பு சம்பந்தமாக எந்த ஒரு முயற்சியும் தமிழக அரசு எடுக்காமல் இருந்தது அம்பலமாகியுள்ளது.
இன்று பாராளுமன்றத்தில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்வி மூலம் இது வெளிவந்துள்ளது.
சாதி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அன்புமணி இராமதாஸ் எழுப்பிய கேள்வி:
2008ஆம் ஆண்டின் புள்ளிவிவரத் தொகுப்புச் சட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு சாதி கணக்கெடுப்பு நடத்துவதற்காக, பல்வேறு சமூகங்களின் பிற்படுத்தப்பட்ட தன்மையை நிரூபிக்க தேவையான சமகால தகவல்களைச் சேகரிப்பதில், அரசுக்கு ஏதேனும் சந்தேகங்கள் உள்ளதா?
உள்ளதெனில், அதற்கான விவரங்கள் என்ன? மேற்கண்ட விடயத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் மத்திய அரசுக்கு ஏதேனும் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளதா? அளிக்கப்பட்டிருந்தால், அதற்கான விவரங்கள் என்ன?

சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை மாநில அமைச்சர் கொடுத்த பதில்:
சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறைக்கு, தமிழ்நாடு அரசு சாதி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
English Summary
Caste Census PMK Anbumani DMK Govt