காவேரி வெள்ளப்பெருக்கு : மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கனமழை மட்டும் மேட்டூரில் இருந்து வெளியேற்றப்படும் நீர் தொடர்பாக, டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை போதும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அதில், போதிய அறிவிப்பு தராமல் மக்கள் எதிர்பாராத நேரத்தில் தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகப்படுத்த கூடாது.

இரவு நேரத்தில் தண்ணீர் அளவினை வெளியேற்றுவது மற்றும் அதிகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்கள் விழிப்போடு இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று, முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தரமான உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இது மட்டும் இல்லாமல் தேவைப்படும் இடங்களில் நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும் என்றும், கனமழை வெள்ளப்பெருக்கால் காவிரி, கொள்ளிடம் கரையோர மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாக கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று, முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cauvery flood issue cm stalin order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->