ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் - ஜான் பாண்டியன்! - Seithipunal
Seithipunal


எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது அரசியல் தலைவர்களுக்கு தமிழக அரசு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்ததாவது,  தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது அதிகரித்துள்ளது. இதற்கு காவல்துறை அதிகாரிகளும் உடனடியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தமிழக அரசு கவனித்து பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

எங்களைப் போன்ற தலைவர்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. நான் உள்ளிட்ட தலைவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதிமுக ஆட்சியில் எனக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு தற்போது விளக்கிக் கொண்டார்கள்.

ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டுமே எனக்கு  பாதுகாப்பு வழங்கி வருகிறார். தமிழக அரசியல் தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI to probe Armstrong murder case John Pandian


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->