பாலியல் குற்றங்களுக்கு செல்போன் பாவனை முக்கிய காரணம்; சிறிய தவறை கூட ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன; கருணாஸ் பேட்டி..! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலக நடிகரும், அரசியல்வாதியுமான கருணாஸ், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது செய்தியாளர்கள் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர் கூறியதாவது; "விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டது பாதுகாப்பு சார்ந்து, மத்திய அரசு வழங்கியது. இதற்கு அரசியல் காரணம் இருக்கலாம். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிறைவாக உள்ளது. எந்த காலத்திலும் இருமொழிக் கொள்கையை தமிழக அரசு விட்டுத் தராது' என்று குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் அவர் தொடர்ந்து பேசுகையில்; 'பாலியல் பிரச்சினைகள் 15 ஆண்டுகளாகவே அதிகரித்துக்கொண்டுத்தான் இருக்கிறது. அதற்கு இன்றைய வாழ்க்கை முறை மற்றும் செய்போன் பயன்பாடும் முக்கிய காரணமாக காரணமாக இருக்கிறது. 

இன்றைய செல்போன் பயன்பாடுகள், தவறான விஷயத்தை உடனுக்குடன் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறது. ஒரு இடத்தில் சிறிய தவறுகள் நடப்பதை ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பெரிதுபடுத்தும்போது, அதே தவறு மீண்டும் நடைபெறுகிறது என்பதே எனது கருத்து என்று குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், 'சில இடங்களில் தவறுகள் நடந்தாலும், அதற்கு தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது. திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.' என்று அவர் மேலும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cell phone use is the main reason for sexual crimes Karunas interview


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->