அதிரடி பேச்சு! மத்திய அரசுக்கு வலியுறுத்தல்..!!! தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்! - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக  உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,"தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் ஜனநாயகம் பாதிக்கப்படும்.தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து முதல் மாநிலமாக 14-ந்தேதி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆலோசித்தோம்.சென்னை கூட்டத்தில் 3 மாநில முதலமைச்சர்கள், கர்நாடக துணை முதல்வர், முக்கிய கட்சி தலைவர்கள் நேரடியிலும், ஒடிசா முன்னாள் முதல்வர் காணொலியிலும் பங்கேற்றனர்.

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொகுதி மறுசீரமைப்பை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் உறுதியளிக்க வேண்டும் என தீர்மானம்.தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து சென்னையில் பிறமாநில கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தினோம்.

முன்னெடுப்புக்கு ஆதரவு தந்த எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் தமிழக மக்கள் சார்பில் நன்றி.பாதிக்கப்படும் மாநிலங்களிலுள்ள எம்.பி.க்களை இணைத்து பிரதமரை சந்தித்து முறையிடப்படும்" எனத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

central government constituency realignment project postponed 25 years Chief Minister MK Stalin


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->