சண்டீகர் சர்வதேச விமான நிலையத்துற்கு பகத் சிங் பெயர்.! - Seithipunal
Seithipunal


பகத் சிங் பெயரை சண்டீகர் சர்வதேச விமான நிலையத்துற்கு சூட்ட பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில அரசுகள் ஒப்புக்கொண்டுள்ளது. இதனை பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். 

பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக பகவந்த் மான் ஆனது முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அம்பேத்கர் மற்றும் பகத்சிங் படங்களை வைக்க உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இதனைத்தொடர்ந்து, சண்டீகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயரை சூட்ட இருப்பதாக முதல்வர் பகவந்த் மான் அறிவித்து இருந்தார். 

இந்நிலையில்,  முதல்வர் பகவந்த் மான் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், 

"சண்டீகர் சர்வதேச விமான நிலையத்துற்கு பகத் சிங் பெயரை சூட்ட பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில அரசு ஒப்புக்கொண்டுள்ளது. 

ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா இடையே நடந்த ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandigarh International Airport is named after Bhagat Singh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->