சந்திரபாபு நாயுடு கீழ்த்தரமானவர்!...கடவுள் அவருக்கு தண்டனை கொடுப்பார் - ரோஜா ஆவேசம்! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேச மாநிலம், அமராவதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பொதுக் கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு உறையாற்றினார்.

அப்போது, ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு கூட தரமற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டதாகவும்,  நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாக பேசி இருந்தார்.

இதற்கிடையே சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்து இருந்தார்.

தொடர்ந்து திருப்பதி லட்டில் மீன் எண்ணெய், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் விலங்குகளின் கொழுப்புகளும் திருப்பதி லட்டில் இருந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஆந்திர முன்னாள் அமையச்சர் ரோஜா, சந்திரபாபு நாயுடு அரசியலுக்காக இவ்வளவு கீழ்த்தரமாக இறங்குவார் என நினைக்கவில்லை என்றும், லட்டு பிரசாதத்தில் கலப்படம் உள்ளதாக கூறினால் பக்தர்களின் மனங்கள் பாதிக்கப்படும் என்பதை அறியாமல், அவர் அரசியலை திசை திருப்புவதற்காக இது போன்று செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், கடவுளிடம் அரசியல் செய்யும் அவருக்கு, கடவுளே பார்த்து தண்டனை கொடுப்பார் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandrababu Naidu is vile will punish him Roja obsession


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->