நாங்கள் பழி வாங்கும் அரசியல் செய்யப் போவதில்லை - சந்திரபாபு நாயுடு ! - Seithipunal
Seithipunal


 ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத்த தேர்தலும் நடந்தது. அதில் தெலுங்கு தேசம், ஜன சேனா, பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டணியாக போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் இன்று வெற்றி பெற்ற எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, " எப்போதும் அமராவதி தான் ஆந்திராவின் ஒரே நிலையான தலைநகராக இருக்கும். நாங்கள் ஆக்கப் பூர்வமான அரசியலை தான் முன்னெடுப்போம். ஒருபோதும் பழி வாங்கும் அரசியலை முன்னெடுக்கப் போவதில்லை.

மாநிலத்திற்கு மூன்று, நான்கு தலைநகர் வைத்து நாங்கள் மக்களோடு விளையாட மாட்டோம். அமராவதி மட்டுமே எங்களின் நிரந்தர தலைநகராக இதுற்கும். அதே சமயம் விசாகப்பட்டினம் வர்த்தக தலைநகராகவும் இருக்கும்" என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்ற குழு தலைவராக சந்திரபாபு நாயுடு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். தொடர்ந்து ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ள சந்திரபாபு நாயுடு நாளை நான்காவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

முன்னதாக 2019ல் ஜெகன் மோகன் ஆட்சிக்கு வந்ததும் ஆந்திராவுக்கு 3 தலைநகர் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகர், அமராவதி சட்டமன்ற தலைநகர், மற்றும் கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் இருக்கும் என்று அப்போது ஜெகன் மோகன் அறிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandrababu Naidu Says We Wont Do Revenge Politics


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->