ஆந்திராவை முதல் மாநிலமாக மாற்றுவேன் - திருப்பதியில் சந்திரபாபு நாயுடு பேட்டி! - Seithipunal
Seithipunal



நேற்று 4ஆவது முறையாக சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றார். இதையடுத்து நேற்று மாலை தனது குடும்பத்துடன் சந்திரபாபு நாயுடு ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு சிறப்பு விமானம் மூலம் வந்தார். அங்கு அவருக்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதையடுத்து அங்கிருந்து திருப்பதி மலைக்கு வந்த சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். இதையடுத்து நேற்று இரவு திருப்பதி மலையில் உள்ள தேவஸ்தான விருந்தினர் இல்லத்தில் குடும்பத்துடன் தங்கிய சந்திரபாபு நாயுடு, இன்று காலை விவிஐபி பிரேக் சிறப்பு தரிசனத்தில் தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அதன் பின்னர் தேவஸ்தான அதிகாரிகள் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரசாதங்கள் மற்றும் பட்டு வஸ்திரங்களை அளித்து கௌரவித்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, "இப்போது தான் மாநிலத்தில் மக்கள் ஆட்சி தொடங்கி உள்ளது.

மக்கள் கொடுத்த இது போலொரு வெற்றியை நான் இதுவரை பார்த்ததில்லை. மாநிலம் செழிப்பாக இருக்கவே பிரார்த்தனை செய்தேன். மக்கள் என் மேல் வைத்த .நம்பிக்கையை காப்பாற்றுவேன். இந்த மாநிலத்தில் இன்று முதல் நல்லாட்சி தான் நடக்கப் போகிறது.

2047ம் ஆண்டிற்குள் ஆந்திராவை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாற்றப் போகிறேன் மேலும் உலக அளவிலும் தெலுங்கு மக்கள் தான் அப்போது முதலிடத்தில் இருப்பார்கள். திருப்பதியில் இருந்து நான் தொடங்குகிறேன். இனி நல்லவர்களை காப்போம். கெட்டவர்களை தண்டிப்போம்" என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandrababu Naidu Says Will change Andhra As A First State In India


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->