வார்த்தையைவிட்ட அதிமுக புள்ளி! தட்டி தூக்கிய போலீசார்!
Chengundram ADMK Nadarajan Arrested
சமூக வலைத்தளங்களில் சட்டத்துக்கு விரோதமாக, அவதூறு பரப்பும் வகையில், கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவுகள் யார் வெளியிட்டாலும், போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமியின் கணவர் நடராஜன் (58 வயது) இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடராஜனின் தம்பிக்கு கொலைக்கு காரணமானவர்கள், வீட்டில் அதை நடத்திக் காட்டுவோம் என்று முகநூல் பக்கத்தில் நடராஜன் மிரட்டல் விடும் வகையில் பதிவிட்டு இருந்ததாக புகார் எழுந்தது.
இதனை அடுத்து சைபர் கிரைம் போலீசார் நடராஜனை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி நடராஜனின் சகோதரரும், அதிமுக பிரகாரம் பார்த்திபன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நாம் தமிழர் கட்சியினருக்கும், திருச்சி எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரிக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் கடும் மோதல் வெடித்துள்ளது.
சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சாட்டை துரைமுருகன் செல்போனில் இருந்த உரையாடல்களை திமுகவை சேர்ந்த ஆதரவாளர்கள் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதன் பின்னணியில் திருச்சி எஸ்பி வருண்குமார் இருப்பதாக குற்றம் சாட்டிய நாம் தமிழர் கட்சியினர், இப்படி ஒரு கேவலமான செயலை செய்த போலீஸ் அதிகாரி பணியில் இருக்கக் கூடாது என்று, அவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இதில் ஒரு சில நாம் தமிழர் கட்சியினர் வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு கொலை மிரட்டல் மற்றும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
இதனை அடுத்து வருண்குமார் ஐபிஎஸ், 50-க்கும் மேற்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டு, அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விடை பெறுவதாகவும் அறிவித்திருந்தார்.
English Summary
Chengundram ADMK Nadarajan Arrested