#சென்னை || காவல் ஆணையத்தின் தலைவர் முன்னிலையில் பாதுகாவலருக்கு வெட்டுக்குத்து.! பெரும்பரபரப்பு சம்பவம்.!
chennai ashok nagar attempt murder
சென்னை : ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியும், காவல் ஆணையத்தின் தலைவருமான சிடி செல்வத்தின் காரை வழிமறித்து, அவரின் பாதுகாவலரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் ஆணையகத்தின் தலைவராக இருந்து வரும் சிடி செல்வம், இன்று காலை ஆலோசனைக் கூட்டம் ஒன்றிற்காக அசோக் நகருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அசோக் நகர் பில்லர் பகுதியில் இவரின் கார் வந்து கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு கும்பல் காரை வழிமறித்து அடாவடித்தனத்தை ஈடுபட்டது.
இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களும் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிடி செல்வம் பாதுகாவலரின் தலையில் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
காயமடைந்த காவலரை மீட்டு உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவரின் தலையில் தற்போது 9 தையல்கள் போடப்பட்டு உள்ளது.
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும், தப்பி ஓடிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யாவும் உத்தரவிட்டுள்ளார்.
வெளியான முதல்கட்ட தகவலின்படி, அசோக் நகர் பில்லர் பகுதியில் சிடி செல்வம் அவர்களின் கார் நின்று கொண்டிருந்த போது, வாகன நெரிசல் ஏற்பட்டதால், பாதுகாவலர் கீழே இறங்கி வாகன நெரிசலை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது போதையில் இருந்த இந்த மூன்று இளைஞர்கள் பாதுகாவலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிகிறது.
English Summary
chennai ashok nagar attempt murder