பெண் நோயாளியிடம் ஆபாசமாக பேசிய அரசு மருத்துவர் கைது..!
government hospital doctor arrest for obscene speech to patient
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பணகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் வள்ளியூரை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இந்த மருத்துவமனைக்கு நேற்று மதியம் சுமார் 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காக வந்தார்.

அப்போது, மருத்துவர் பாலச்சந்தர் அந்த பெண்ணிடம் ஆபாசமான வார்த்தைகளால் பேசியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் பேரில் போலீசார், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் பாலச்சந்தர், இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மருத்துவர் பாலச்சந்தரை கைது செய்தனர்.
English Summary
government hospital doctor arrest for obscene speech to patient