பாஜக நிர்வாகி பாலச்சந்திரன் கொலை குறித்து, போலீஸ் தரப்பிலிருந்து வெளியான பரபரப்பு தகவல்.!
chennai bjp balachandran murder case
சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்த பாஜகவின் எஸ்.சி, எஸ்.டி. பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவர் பாலச்சந்திரன் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு 7.50 மணி அளவில் பாலச்சந்திரன் போலீசார் பாதுகாப்புடன் சிந்தாரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவிற்கு சென்றார். பின் அருகில் இருந்த டீ கடைக்கு சென்ற அவரை இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிந்தாரிப்பேட்டை போலீசார் பாலச்சந்திரன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாலச்சந்திரனின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் பிரதிப், சஞ்சய், கலைவாணன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பாலச்சந்தருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டும் அதை தவிர்த்து நண்பர்களை காண சென்றபோது இச் சம்பவம் நடந்துள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது சம்பந்தமாக இருதரப்பினரிடையே மேலும் மோதல் ஏற்படாதிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாலச்சந்தர், இரண்டு கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 6 வழக்குகளில கைதாகி ஜாமீனில் இருந்தவரை தொழில்போட்டி காரணமாக அதே சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 10 க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளி பிரதீப் மற்றும் கூட்டாளிகளால் வெட்டப்பட்டதாக தெரியவருகிறது" என்று வச்ரன்னை போலீசார் விளக்கமளித்துள்ளனர்.
English Summary
chennai bjp balachandran murder case