சென்னையை அழகுபடுத்த ரூ.65 கோடியை ஒதுக்கிய மேயர் பிரியா!
Chennai Corporation Budget 2025
சென்னை மாநகராட்சியின் 2025-2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், நகரின் ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்த ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
இதற்காக, சாலைகளின் மைய தடுப்புகள் மற்றும் தீவுத்திட்டங்களை அழகுபடுத்தி பராமரிக்க ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சி நுழைவாயில்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் சிறப்பான வெளிச்ச விளக்குகள் மற்றும் செயற்கை நீரூற்றுகள் அமைப்பதற்காக ரூ.5 கோடி செலவிடப்படும்.
மேலும், நகரில் உள்ள மேம்பாலங்கள் மற்றும் ரெயில்வே மேம்பாலங்களின் கீழ் சுற்றுச்சூழல் தோற்றத்தை மேம்படுத்தும் பணிகள் ரூ.42 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த திட்டங்கள், நகரின் அழகை உயர்த்துவதோடு, பொதுமக்களுக்கு மேலும் வசதியான சூழல் உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Chennai Corporation Budget 2025