மாட்டுக்கறி உணவு எங்கே? சென்னை உணவு திருவிழாவில் சர்ச்சை?! ஸ்டாலின் தலைமையிலான அரசு பார்ப்பனிய மனநிலையில் உள்ளதா? தலித் செயல்பாட்டாளர் கேள்வி! - Seithipunal
Seithipunal


சென்னையில் துணை முதல்வர் உதயநிதியால் தொடங்கிவைக்கப்பட்ட உணவு திருவிழாவில் மாட்டுக்கறி பண்டங்கள் தவிர்க்க பட்டு இருப்பதற்கு, தலித் செயல்பாட்டாளர், எழுத்தாளர் ஷெர்லின் மரியா லாரன்ஸ் கண்டனம் தெரிய்வத்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "இந்த முறையும் தமிழக அரசு சார்பாக மரினா கடற்கரையில் நடக்கும் மாநிலங்கள் சார்ந்த உணவு திருவிழாவில் மாட்டுக்கறி பண்டங்கள் தவிர்க்க பட்டு இருக்கின்றன .

தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு பயணித்து இருக்கிறேன். மாட்டுக்கறி சாப்பிடாத ஊர் என்று ஒன்றை கண்டது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் சென்னை உட்பட பல மாவட்டங்களில் பன்றி இறைச்சி மிக பிரசித்தம். ஆனாலும் அதுவும் இல்லை .

இதில் இருந்து தமிழக அரசு உணவில் தீண்டாமையை கடை பிடிப்பதை உணர முடிகிறது.

அரசு நடத்தும் நிகழ்வுகளில் தான் சாதிய பார்வை, உணவு சார்ந்த தீண்டாமை பழக்கங்கள் ஒழிப்பதை இயல்பாக முன்னெடுக்க முடியும். ஆனால் திரு ஸ்டாலின் தலைமையிலான அரசு பார்ப்பனிய மனநிலையில் இருப்பதை நன்றாக காண முடிகிறது" என்று தெரிவித்துள்ளார். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Food Festival Beef Food DMK MK STalin Govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->