#சென்னை | மர்ம காய்ச்சலுக்கு 13 வயது சிறுமி பலி - அரசு மருத்துவமனை மீது பெற்றோர்கள் குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே மர்ம காய்ச்சலுக்கு 13 வயது சிறுமி ஒருவர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரின் மூத்த மகள் பூஜா (வயது 13) விருகம்பாக்கம் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் சிறுமி பூஜா கேஎம்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிறுமி பூஜா உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. சிறுமியின் மரணம் குறித்து பெற்றோர்கள் மருத்துவமனையில் கேட்டதற்கு, மர்மகாச்சலால் சிறுமி உயிரிழந்து உள்ளார் என்று தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தனது மகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றும், மகளின் மரணம் குறித்து மருத்துவமனை தரப்பில் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும் சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கிடையே, சிறுமிக்கு இருந்த காய்ச்சல் தொற்று போல அந்த பகுதியில் மேலும் சிலருக்கு இருப்பதாகவும், இதனால் மாநகராட்சி சார்பில் குப்பை அகற்றுதல், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai girl death in mystery flu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->