இனி பணியிடை  நீக்கம் தான்! மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை! - Seithipunal
Seithipunal


தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்று தெரியவில்லை. மனித கழிவை அகற்றும் பணியில் மனிதர்களை பயன்படுத்தினால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பணியிடை  நீக்கம் செய்யப்படுவார்கள் என்று, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் அய்யா. இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

அவரின் அந்த மனுவில், "கடந்த 2013-லேயெ மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மனித கழிவுகளை மனிதர்களே எடுக்கும் அவலம் தொடர்கிறது.  

எனவே, மனித கழுவுகளை இயந்திரங்களை கொண்டு அள்ளுவதற்கு உத்தர வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கை ன்று விசாரணை செய்த நீதிமன்றம். "மனித கழிவுகளை மனிதன் அள்ள தடை விதித்த உத்தரவை செயல்படுத்திய ஆவணங்களை அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டது.

மேலும், தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்று தெரியவில்லை. மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒருபோதும் நீதிமன்றம் அனுமதிக்காது. அப்படியான நிகழ்வு இனி நடந்தால் மாவட்ட ஆட்சியர்கள் பணியிடை  நீக்கம் செய்யப்படுவார்கள் என்று நீதிபதிகள் மகா தேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai hc divition order for cleaning workers issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->