கோவில் காசில் அமைச்சர்களுக்கு வாகனம்? கண்காணிக்க மட்டும்தான் அறநிலைத்துறை - உயர்நீதிமன்றம் அதிரடி! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு தேவையான செலவுகளை கோயில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது என்றும், கண்காணிக்க மட்டும் தான் அறநிலைத்துறை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிதியில் கல்லூரிகள் துவங்க எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரின் அந்த மனுவில், "இந்து கோவில்களின் நிதியில் அறநிலையத்துறை அதிகாரிகளின் அலுவலகங்களில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும், முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சருக்கு வாகனங்கள் வாங்கவும் பயன்படுத்தப்படுவதாக, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களை சமர்ப்பிக்கிறேன்.

கோவில் மொத்த வருமானத்தில் 12 சதவீதம் கோயில்களை நிர்வகிப்பதற்காக நிர்வாகக் கட்டணமாக வழங்கப்படுகிறது. ஆனால், எந்த தயக்கமும் இல்லாமல் கோயில் நிதியை அரசு நிதி போல அறநிலையத்துறைக்காக பயன்படுத்தப்படுகிறது. இதனை சிறப்பு தணிக்கை செய்தால் அனைத்து தகவல்களும் அம்பலமாகும்" என்று தெரிவித்திருந்தார். மேலும் இதனை இன்று விதமாகவும் வைக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், "கோயில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது.. கோயில் நிதியை, காரணமில்லாமல் வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது. 

தொகுப்பு நிதியில் இருந்து மட்டும் தான் அறநிலையத்துறை செலவுகளுக்கு செலவழிக்க வேண்டும். அறநிலைத்துறை கண்காணிப்பு என்ற பெயரில் கோயில் வளங்களை எடுக்க முடியாது" என்று தெரிவித்தனர். மேலும் வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 8-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai hc TN hindu temple income


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->